பைல்களைக் காப்பி செய்து கொண்டு செல்ல தற்போது அனைவரும் பயன்படுத்துவது யு.எஸ்.பி. டிரைவ்களைத்தான். பிளாஷ் மெமரி ஸ்டிக், தம்ப் டிரைவ், யு.எஸ்.பி. ஸ்டிக் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த வகை மெமரி சாதனங்களில் பைல்களைக் காப்பி செய்யும் வசதி மட்டுமின்றி எப்.எம். ரேடியோ, ரெகார்டர், ஆடியோ பாடல்களின் பார்மட்டுகளை மாற்றிப் பதியும் வசதி, ஸ்பீக்கர், எம்பி 3 பிளேயர் எனப் பல கூடுதல் வசதிகளும் உள்ளன. சிடிக்கள், இன்னும் மோசமான பிளாப்பிகளில் பைல்களைக் காப்பி செய்வதனைக் காட்டிலும் தம்ப் டிரைவ்கள் நமக்கு எளிதான மற்றும் நம்பிக்கையான சாதனமாகவே இருக்கின்றன. இருப்பினும் இன்னொரு வகையான பயன்பாட்டினைப் பலர் கையாள்வதில்லை. தம்ப் டிரைவ்களின் முக்கிய அம்சம் அவற்றை எளிதாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும் என்பதுதான். அது மட்டுமின்றி பல்வேறு வகையான கம்ப்யூட்டர்களில் அவற்றைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதுவும் ஒரு கூடுதல் வசதியாகும். இவ்வகையில் தான் இன்னொரு கூடுதல் பயன்பாட்டை நமக்கு இந்த தம்ப் டிரைவ்கள் தருகின்றன. அவற்றை இங்கு காண்போம்.
1. போர்ட்டபிள் பயர்பாக்ஸ்: (Portable Firefox)
நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பைப் பயன்படுத்தி பழக்கப் பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் சொந்த கம்ப்யூட்டரை விட்டு விட்டு ஏதேனும் ஒரு பிரவுசிங் சென்டருக்குச் செல்கையில் அல்லது நண்பரின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அவற்றில் பயர்பாக்ஸ் இருக்காது. அவர்களின் கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் தொகுப்பை இன்ஸ்டால் செய்வதனையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். உங்கள் தம்ப் டிரைவில் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் தொகுப்பு கிடைக்கிறது. இதனை தம்ப் டிரைவில் பதிவு செய்து எடுத்துச் சென்று எந்தக் கம்ப்யூட்டரிலும் அந்த டிரைவில் இருந்தபடியே பயன்படுத்தலாம். உங்களுக்குப் பிடித்தமான புக் மார்க் மற்றும் பிற செட்டிங்குகள் தகவல்களையும் இதில் எடுத்துச் செல்லலாம். இந்த தொகுப்பினை http://prdownloads.sourceforge.net/portablefirefox/Portable_Firefox_1.5.0.3_enus.exe?download என்ற முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்தில் இருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். இதனை தம்ப் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்று அப்படியே பயன்படுத்தலாம்.
2. பாக்ஸ் இட் பி.டி.எப். ரீடர்: பெயருக்கேற்ற பணியை இது மேற்கொள்கிறது. ஒரு பி.டி.எப். ரீடர் தொகுப்பில் எந்த எந்த பணியை மேற்கொள்ளலாமோ அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக பிரவுசருடன் இணைந்து செயல்படுகிறது. காப்பி / பேஸ்ட் பணிகளை எளிதாக்குகிறது. பிடிஎப் டாகுமெண்ட்டுகளிலிருந்து டெக்ஸ்ட்டை எடுக்க முடிகிறது. இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் வழக்கமான பிடிஎப் ரீடர் தொகுப்பு பைல்களை இயக்கும் நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இது அப்பணிகளை மேற்கொள்கிறது. இதனைக் கீழ்க்காணும் முகவரியில் உள்ள இணைய தளப் பக்கத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். http://www.foxitsoftware.com/foxitreader/foxitreader_setup.exe
3. ட்ரீ பேட் லைட் :(Treepadlite) இந்த தொகுப்பு உங்களின் பெர்சனல் தகவல்களைக் கைக்குள் கொண்டு சென்று கையாள உதவுகிறது. பெர்சனல் இன்பர்மேஷன் மேனேஜர் என இதனை அழைக்கலாம். இமெயில், நோட்ஸ், ஹைப்பர்லிங்க்ஸ், டெக்ஸ்ட் போன்றவற்றை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா பேஸ்களில் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். இது அனைவருக்கும் அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்புளோரர் போலத் தோற்றம் கொண்டு செயல்படுகிறது. இதனால் டேட்டாக்களைப் பதிவு செய்திடவும், மீண்டும் பெற்றிடவும் மற்றும் கையாளவும் எளிதாக உள்ளது. இதில் உள்ள சர்ச் பங்ஷன் உங்கள் தகவல் தேடுதலை மிக மிக எளிதாக்குகிறது. அனைத்தும் உங்கள் யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கிலிருந்தே மேற்கொள்ளலாம். இந்த தொகுப்பினைக் கீழ்க்காணும் தளப் பக்கத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். http://nlsoftware.com/download/treepad.zip
4. குயிக் மெயிலர்: (Quick Mailer) நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இமெயில் கடிதங்களைப் பார்வையிட இமெயில் கிளையண்ட் புரோகிராம் இல்லை என்றால் என்ன செய்வது? இதற்காக இடோரா அல்லது அவுட்லுக் போன்ற ஒரு முழு பெரிய புரோகிராமினைப் பதிவது சரியல்ல. அத்தகைய சூழ்நிலையில் இந்த புரோகிராம் உதவுகிறது. இது மிக மிகச் சிறிய புரோகிராம். இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. இது கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசருடன் எளிதாக இணைந்து செயல்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை இதிலிருந்து இயக்கலாம். இதில் உள்ள From பீல்டில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை அமைத்தால் போதும். மற்றவற்றை இந்த புரோகிராம் பார்த்துக் கொள்கிறது. இதனைக் கீழ்க்காணும் முகவரியிலிருந்து இலவசமாக இறக்கிப் பதிந்து கொள்ளலாம். http://pyric.org/qm/qm2_2.zip
5. வேர்ட்வெப் : (Wordweb) இது ஆங்கில மொழிக்கான தெசாரஸ் மற்றும் டிக்ஷனரி. சொற்களுக்குப் பொருள், அதே பொருள் தரும் பிற சொற்கள்,விளக்கங்கள், பெயர்ச் சொற்கள் மற்றும் சார்ந்த சொற்கள் என மொழி பயன்பாடு சார்ந்த அனைத்து வசதிகளையும் தருகிறது. அத்துடன் ஒரு சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் காட்டுகிறது. இதனை தம்ப் டிரைவில் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இந்த தொகுப்பு கிடைக்கும் இணைய பக்க முகவரி : http://wordweb.info/cgibin/geoip/wordweb.exe
6. மிராண்டா இன்ஸ்டண்ட் மெசஞ்சர்: (Miranda Instant Messenger) அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றுகையில் பிரவுசிங் கூட அனுமதிப்பார்கள். ஆனால் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் என்னும் சேட்டிங் அனுமதிக்க மாட்டார்கள். அது போன்ற இடங்களில் மிகவும் பயன்படும் சாதனமாகும் இது. இதன் மூலம் எம்.எஸ்.என் . யாஹூ, ஐ.சி.க்யூ., ஏ.ஐ.எம். போன்ற இன்ஸ்டண்ட் மெசஞ்சர்களுடன் எளிதாக இணைத்துக் கொள்ள இது உதவுகிறது. இதனை யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கில் இருந்தபடியே பயன் படுத்தலாம். இதில் ஏறத்தாழ 350 பிளக் – இன் வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதனை இலவசமாக இறக்கிப் பயன்படுத்த அணுக வேண்டிய இணைய தள முகவரி http://prdownloads.sourceforge.net/miranda/mirandaimv0.4.0.3.exe?download
7. ஓப்பன் ஆபீஸ் போர்ட்டபிள் : (Open Office Portable) இந்த தொகுப்பு சற்று பெரியது என்றாலும் யு.எஸ்.பி. ஸ்டிக்கிலிருந்தே பயன்படுத்தலாம். கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் ஒரு எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு, அதுவும் இலவசமாக, இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அது தான் இது. இது ஒரு ஆபீஸ் தொகுப்பு. ஸ்டிக்கில் இருந்தபடியே இயக்கலாம். இதில் ஒரு வேர்ட் பிராசசர், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன் டூல், டிராயிங் பேக்கேஜ், மற்றும் டேட்டா பேஸ் என அனைத்தும் கொண்டுள்ளது. இது எம்.எஸ். ஆபீஸ், லோட்டஸ், வேர்ட் பெர்பெக்ட் போன்ற தொகுப்புகளுடனும் இணைந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் எந்த வகை டாகுமெண்ட்டையும் இதன் மூலம் எந்த இடத்திற்கும் எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தும் வகையில் கொண்டு செல்லலாம். இந்த தொகுப்பைப் பெற அணுக வேண்டிய இணைய தள முகவரி: http://portableapps.com/apps/office/openoffice_portable
8.போர்ட்டபிள் ஜி.ஐ.எம்.பி. (Portable GIMP) விண்டோஸ் தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய இமேஜ் எடிட்டர் சாப்ட்வேர் தொகுப்பு. போட்டோக்களை டச் செய்து திருத்தி அமைக்கும் பணி, இமேஜ் அமைக்கும் பணி, ஆதரிங் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. பெயிண்ட் புரோகிராமாகக் குழந்தைகள் கூட இதனைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் இமேஜ் பார்மட்டுகளை மாற்றி அமைத்திட முடியும். பிளக் இன் சாதனங்களை இணைத்து இதன் வசதிகளை இன்னும் சிறப்பாக அமைத்திட முடியும். இதனைப் பெற கீழ்க்காணும் தள முகவரியை அணுகவும். http://prdownloads.sourceforge.net/portableoo/portable_openoffice_2.0.2_enus.zip?download
9. எக்ஸ்.எம். பிளே: (XMPlay) எந்த வகையான பாடல் பைலையும் இயக்கிப் பாட்டு கேட்க இந்த தொகுப்பினைப் பயன்படுத்தலாம். MP3, OGG, WAV, WMA போன்ற பல வகையான பார்மட்டுகளையும் இது இயக்கவல்லது. தற்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பலவகையான ஆடியோ பிளேயர்களைப் போலவே இதுவும் இயங்குகிறது. இதற்கும் பிளக் இன் மற்றும் ஸ்கின்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இதன் வசதிகள் கூடுகின்றன. இதனையும் மெமரி ஸ்டிக்கில் இருந்தபடியேஇயக்கலாம். இந்த தொகுப்பு கீழ்க்காணும் இணைய தளத்தில் கிடைக்கிறது. http://www.un4seen.com/files/xmplay33.zip
10.யுனிவர்சல் எக்ஸ்ட்ராக்டர்: (Universal Extractor) சுருக்கப்பட்ட எந்த வகையான பைல்களையும் இந்த புரோகிராம் விரித்துக் கொடுக்கிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கிலிருந்தே இதனை இயக்கலாம். .zip .rar என எந்த வகையில் சுருக்கப்பட்ட பைலையும் இதன் மூலம் பிரித்து பதியலாம். விரிக்கப்பட வேண்டிய பைலை இந்த புரோகிராம் மூலம் அடைந்து ரைட் கிளிக் செய்து விரிக்கலாம். மிக மிக எளிதான வகையில் இயக்கக் கூடியது.www.c1pher.com/uniextract121.exe nஎன்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இந்த தொகுப்பு கிடைக்கிறது.
யு.எஸ்.பி. ஸ்டிக் மூலம் பல வசதிகளைத் தரக்கூடிய புரோகிராம்களை நமக்கே உரியதான வகையில் எடுத்து இயக்கலாம் என்பது நன்மை தரும் விஷயம் தான். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இயக்குகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் நல்லதொரு வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அது அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். கம்ப்யூட்டரையும் யு.எஸ்.பி. ஸ்டிக்கினையும் அவ்வப்போது வைரஸ் இருக்கிறதா என ஸ்கேன் செய்து பரிசோதிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் பிற கம்ப்யூட்டர்களும் இதே போல பரிசோதனைகளைச் சந்தித்துள்ளதா என்பதனை உறுதி செய்திட வேண்டும். யு.எஸ்.பி. ஸ்டிக்கை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கையில் கவனமாக இருக்க வேண்டும். ஸ்டிக் இயங்கிக் கொண்டிருக்கையில் எடுத்தால் ஸ்டிக் வீணாகும் அல்லது அதில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் கிராஷ் ஆகும். எப்போதும் சிஸ்டம் டிரேயில் உள்ள யு.எஸ்.பி. ஸ்டிக் ஐகானைக் கிளிக் செய்து அதில் மெமரி ஸ்டிக்கை எடுக்கலாம் என்ற செய்தி வந்த பின்னரே எடுக்க வேண்டும். எப்போதும் உங்கள் பைல்களை பேக்கப் செய்து வைக்கவும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியம் செய்திடாமல் பயன்படுத்தி வந்தால் நிச்சயமாய் உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் யு.எஸ்.பி. ஸ்டிக் பெரிய ஒரு வலிமையான சாதனமாக உங்களுக்குத் தெரியவரும்.
No comments:
Post a Comment