Tuesday, April 3, 2007

Windows_VISTA

விண்டோஸ் விஸ்டா

ஏறத்தாழ ஆறு ஆண்டுகள், 600 கோடி டாலர்கள், 5000 கம்ப்யூட்டர் புரோகிராமிங் வல்லுநர்கள் (இந்தியர்கள் 300 பேர்) எனப் பல்வேறு வகைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் விஸ்டா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுவிட்டது. நிறுவனங்களுக்கான பதிப்பு சென்ற டிசம்பரில் வெளியிடப்பட்டாலும் பல நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வியப்பான செய்தியே. தற்போது வந்திருக்கும் பொதுமக்களுக்கான விஸ்டா பதிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் கம்ப்யூட்டரை மக்கள் விரும்பினாலும் அதற்கென தற்போது விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் கம்ப்யூட்டரின் விலைக்கு மேலாக 5% முதல் 6% வரை கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

முற்றிலும் புதிய சில வசதிகள் இந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கின்றன என்று பல மாதங்களுக்கு முன்னரே இப்பகுதியில் எழுதி இருந்தோம். ஹார்ட்வேர் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஏரோ கிளாஸ் எனப்படும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ், கூடுதலான வழிகளில் தேடி அறியும் வசதி, புதிய ஆடியோ சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு போன்ற விஸ்டா தரும் வசதிகள் பெரும்பாலும் புதியனவாகத் தான் இருக்கின்றன. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் கம்ப்யூட்டரில் பதித்து இயக்க ஹார்ட்வேர் சாதனங்கள் அதற்கிணையான வகையில் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வெளிவந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஹார்ட்வேர் தேவைகளைக் காட்டிலும் தற்போது கூடுதலாகவே தேவை இருக்கும் என கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் எச்.பி. மற்றும் டெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விஸ்டா பதிந்து இயக்கக் கீழ்க்காணும் குறைந்த பட்ச அளவிலான ஹார்ட்வேர் சாதனங்களுடன் ஒரு கம்ப்யூட்டர் வடிவமைக் கப்பட்டிருக்க வேண்டும். 800 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சிப், குறைந்தது 20 கிகாபைட் காலி இடம் உள்ள ஹார்ட் டிஸ்க், குறைந்தது 128 எம்பி விடியோ ராம் கொண்ட கூடுதல் திறனுடன் கூடிய கிராபிக் கார்ட் ஆகியவை சில அடிப்படைத் தேவைகளாகும். முழுமையான அளவிலான விஸ்டா பதிப்பு ரூ.16,000 க்கும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட விஸ்டா பதிப்பு ரூ.8,000க்கும் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் விஸ்டா சிஸ்டத்தினை எதிர்பார்த்தே அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். எனவே இவர்கள் விண்டோஸ் விஸ்டாவிற்கு மாறிக் கொள்ள பிரச்னை இருக்காது. பழைய எக்ஸ்பி கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர்கள் தங்கள் மெமரியினை கூடுதலாக்க குறைந்த அளவில் பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும். விண்டோஸ் விஸ்டாவின் இன்னொரு சிறப்பம்சம் இது 18 பன்னாட்டளவிலான மொழிகளில் வெளியிடப்பட்டது என்பது தான். இந்தியாவில் ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் தெலுங்கு மற்றும் மராத்தி உட்பட 13 இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட உள்ளது. ஹைதராபாத் நகரில் இயங்கும் மைக்ரோசாப்ட் ஆய்வு மையத்தில் 3000 வல்லுநர்கள் விண்டோஸ் விஸ்டா வடிவமைப்பில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ரிமோட் இணைப்பு, பைல்கள் பேக்கப் மற்றும் பைல் சிஸ்டம் பயன்பாடுகள் ஆகியவற்றில் இவர்களின் திறமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான விண்டோஸ் விஸ்டா பதிப்பில் நான்கு வகைகள் வெளிவரு கின்றன. ஸ்டார்ட்டர் எடிஷன் என்று அழைக்கப்படும் பதிப்பு ரூ. 22,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பதிவதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்த பதிப்பு வீடுகளிலும் சிறிய அலுவலகங்களிலும் பயன்படுத்தவதற்கென உருவாக்கப்பட்ட ஹோம் பேசிக் வகை ஆகும். மூன்றாவதாக உள்ள ஹோம் பிரிமியம் எடிஷன் இதற்கு முன் உள்ள மல்ட்டி மீடியா சென்டர் எடிஷன் போல மல்ட்டி மீடியா வசதிகள் கொண்டது ஆகும். நான்கா வதாக உள்ள மல்ட்டி மீடியா அல்டிமேட் என்னும் பதிப்பில் ஹோம் வகைப் பதிப்பில் உள்ள வசதிகளுடன் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வசதிகளும் வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளும் இணைக்கப்பட்டு இயங்குகின்றன. விண்டோஸ் விஸ்டா பதிப்புடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பதிப்பும் ஜனவரி 30 அன்று அனைத்து நாடுகளிலும் வெளியிடப்பட்டது.

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பால்மர் விஸ்டா பற்றி குறிப்பிடுகையில் இன்னும் மூன்று மாதங்களில் விண்டோஸ் 95 தொகுப்பு முன்பு விற்பனையானதைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதலாக விஸ்டா விற்பனையாகும் என்று குறிப்பிட்டார்.


விஸ்டா – இதுவரை தெரிந்த புதுமைகளும் வசதிகளும்


1. கம்ப்யூட்டரில் புதிய ஹார்ட் டிஸ்க்கை நிறுவுகையில் அதற்கான டிரைவரை முதலில் பதித்த பின்னரே அதில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதித்து வந்தோம். எடுத்துக் காட்டாக தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் சடா (SATA) வகை ஹார்ட் டிஸ்க்குகளை அப்படித்தான் பதிக்கிறோம். விண்டோஸ் விஸ்டாவைப் பொறுத்த வரை இது தேவையில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டமே ஹார்ட் டிஸ்க்கைப் புரிந்து கொண்டு அதற்கான டிரைவர்களை வைத்துக் கொண்டு இயங்குகிறது.

2. விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள டிவிடி டிஸ்க்கை வைத்து அதனைக் கம்ப்யூட்டரில் பதியும் போது ஏதேனும் காரணங்களால் கம்ப்யூட்டர் இயங்காமல் போனாலோ அல்லது மின் சக்தி வழங்குவது நின்று போனாலோ மீண்டும் முதலில் இருந்து பதிவு வேலையைத் தொடங்க வேண்டியதில்லை. மறுபடியும் விஸ்டா டிவிடியைப் போட்டவுடன் தானாக விட்ட இடத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து தொடங்கி முடித்து விடும். இதில் பிரச்னை ஏற்பட்டால் தான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

3. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஒரு பைலைத் தேடுகிறீர்கள். நாள் வாரியாக அல்லது பேர் வாரியாகத் தேடி ஒரு வழியாகக் கண்டு பிடிக்கிறீர்கள். பின் பைலைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் எப்படி தேடினோம் என்பதனையும் தேடும்போது அதே பெயரில் பெற்ற பிற வகை பைல்கள் என்ன என்ன என்பதனையும் மறந்துவிடுகிறீர்கள். இன்னொரு நாளில் "அடடா அதனைக் குறித்து வைக்க மறந்துவிட்டோமே" என்று ஆதங்கப்படுகிறீர்கள். விஸ்டா இதற்கெல்லாம் வழி தருகிறது. உங்களின் ஒவ்வொரு தேடலையும் \Searches\folder என்னும் போல்டரில் பதிந்து வைக்கிறது. ஏதேனும் ஒரு தேடலை மீண்டும் தொடங்கினால் அதனை அப்போது அப்டேட் செய்கிறது. இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது.

4. இப்போது சிஸ்டம் டிரேயில் ஒரு கடிகாரம் இருக்கிறது. நம்மில் பலருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது சிங்கப்பூரில் அல்லது அமெரிக்காவில் என்ன நேரம் இருக்கும் என்று நமக்குள் கேட்டுப் பார்க்கிறோம். பின் கணக்குப் போட்டு கண்டு பிடிக்கிறோம். இதெல்லாம் விஸ்டாவில் தேவையில்லை. சிஸ்டம் டிரேயில் ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களை வைத்துக் கொள்ளலாம். நம் பிரியமானவர்கள் அல்லது தொழில் நண்பர்கள் இருக்கும் நாடுகளின் நேரத்தை ஒவ்வொன்றிலும் போட்டு வைத்து அறிந்து கொள்ளலாம்.

5. விளையாட்டுப் பிரியர்களுக்கு நல்ல வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. விளையாட்டு ஒன்றினை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். பாதியில் வேறு வேலை இருக்கிறது. இந்த விளையாட்டைப் பாதியில் சேமித்து வைத்து பின் தொடர சில விளையாட்டுக்களில் வசதி உள்ளது. அப்படி எக்ஸ்பியில் நீங்கள் இடையே விட்டுப் போன விளையாட்டுக்களை விஸ்டாவிற்குக் கொண்டு வந்து தொடரலாம். விஸ்டாவில் இயங்கும் விளையாட்டுக்களையும் இதே போல தொடரலாம். Saved Games என்ற போல்டரில் இவை தங்குகின்றன. விஸ்டா தரும் Games போல்டர் என்பதுவும் விளையாட்டுப் பிரியர்களுக்கு வசதியான ஒன்று. கேம்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தும் இதில் தங்குகின்றன. இதிலிருந்து விளையாட்டுக்களை இயக்கலாம். விளையாட்டுக்களுக்கெனத் தரப்படும் பேட்ச் பைல்களை இணைக்கலாம். குழந்தைகள் விளையாடாமல் இருக்க தடைகளை உருவாக்கலாம்.

6. வழக்கமான டெக்ஸ்ட் மற்றும் டாகுமென்ட் பைல்களுக்குப் பதிலாக பைல்களை அதிக பாதுகாப்புள்ள எக்ஸ்.எம்.எல். வகையில் பதிந்து கொள்ளலாம். இதற்கு வேர்ட் பிராசசரில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின் பிரிண்ட் கட்டளை கொடுத்து அதில் கிடைக்கும் ஆப்ஷன்களில் XML printer என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்து கொள்ள வேண்டும்.

7. விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் நீங்கள் பெற பல தளங்களில் Tweak புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சில : Tweak VI என்னும் புரோகிராமை www.totalidea.com என்னும் தளத்திலிருந்தும் TweakVista என்னும் புரோகிராமை www.tweakvista.com/tweakvistautility என்னும் தளத்திலிருந்தும் இறக்கி, இயக்கிப் பயன்படுத்தலாம். இவற்றுடன் ஙடிண்tச்ஆணிணிtககீO என்றும் ஒரு புரோகிராம் www.vistabootpro.org என்ற தளத்தில் கிடைக்கிறது. இதுவும் சிறப்பாக விஸ்டாவின் வசதிகளைப் பயன்படுத்த துணை செய்கிறது. இன்னொன்றையும் இங்கு நினைவு படுத்த வேண்டும். Windows ReadyBoost என்ற புரோகிராம் மூலம் கழட்டி எடுத்துச் செல்லக் கூடிய பிளாஷ் மெமரியைக் கம்ப்யூட்டரின் மெமரியாகப் பயன்படுத்தலாம்.

8. மிக முக்கியமான மற்றும் அதிக வசதி கொண்ட பிரிவு விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஆகும். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களை வரிசைப் படுத்த பெயர், சைஸ், வகை, திருத்தப்பட்ட தேதி, உருவாக்கப்பட்ட தேதி (Name, Size) எனப் பல வகைகளைப் பயன்படுத்துகிறோம். விண்டோஸ் எக்ஸ்பியில் இது போல 45 வகைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் விண்டோஸ் விஸ்டாவில் 250 வகைகள் உள்ளன. இவற்றால் பைல்களைத் தேடி அறிவது மிக மிக எளிதாகிறது.


விண்டோஸ் விஸ்டா கேள்விகளும் பதில்களும்

விண்டோஸ் விஸ்டா என்பது என்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு வழங்கப்படும் இன்றைய ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது கடந்த ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக பொது மக்களுக்குச் சென்ற ஜனவரி 30ல் கிடைத்துள்ளது.


விஸ்டாவில் விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லாதது என்ன உள்ளது?

விண்டோஸ் எக்ஸ்பியைக் காட்டிலும் விஸ்டா கூடுதல் திறனுடன் அதிகப் பாதுகாப்புடனும் பல புதிய வசதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சீராகவும் விரைவாகவும் தேடும் வசதி, ஏரோ என்ற யூசர் வசதி இதில் குறிப்பிடத்தக்கன.


கூடுதல் பாதுகாப்பு தரும் வகையில் விஸ்டாவில் என்ன இருக்கிறது?


அவ்வப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் புதிய செக்யூரிட்டி தடுப்புகளை விஸ்டா தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். இதில் புதியதாக "பயர்வால்" என்றுசொல்லப்படும் வைரஸ் தடுப்பு சுவர் தரும் புரோகிராம் போன்று செயல்படும் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் டிபண்டர் என்ற ஒரு வசதி கம்ப்யூட்டர்களை ஸ்பைவேர் மற்றும் பிற தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளிலிருந்து தடுக்கிறது. மேலும் "Malicious Software Removal Tool" என்ற ஒரு விஸ்டா சாதனம் குறிப்பிட்ட காலத்தில் அதுவாகவே தேவையற்ற புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை வந்தடைந்துள்ளனவா என்று பார்த்து தடுக்கும் மற்றும் அழிக்கும்.

விஸ்டாவில் வைரஸ் தடுப்பு வசதிகள் இருப்பதனால் விஸ்டா போட்டபின்பு தற்போது நான் பயன்படுத்தும் ஆன்டி வைரஸ் தொகுப்பு தேவைப்படுமா?

ஆம். மைக்ரோசாப்ட் நிறுவனமே இதனைச் சொல்லியுள்ளது. ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழிப்பு சாப்ட்வேர் தடுப்பு புரோகிராம்களை போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ்களுக்கு எதிராகப் பல அடுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

என்னுடைய பழைய சாப்ட்வேர் தொகுப்புகள், பிரிண்டர் போன்ற சாதனங்கள் விஸ்டாவுடன் இயங்குமா?

பழைய சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்கும் வகையில் தான் விஸ்டா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. துணை சாதனங்களை (பிரிண்டர், ஸ்கேனர் போன்றவை) தயாரிப்பவர்கள் விஸ்டாவுடன் இயங்கும் வகையிலேயே சாதனங்களைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். சில பழைய மாடல் சாதனங்களுக்கு புதிய டிரைவர்கள் தேவைப்படலாம். இவற்றை மைக்ரோசாப்ட் அல்லது அந்த சாதனங்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களின் இணைய தளங்களிலிருந்து இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.

விண்டோஸ் விஸ்டாவினை விலை கொடுத்து வாங்குவது அந்த செலவிற்கு ஈடான பலனைத் தருமா? அல்லது பழைய விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புடன் பொழுதை ஓட்டி விடலாமா?

மிக மிக முக்கியமான கேள்வி. உங்களுடைய கம்ப்யூட்டர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாக இருந்ததால் விண்டோஸ் விஸ்டா பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் விஸ்டா இயங்க உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேரினை அப்கிரேட் செய்திட அதிகம் செலவாகும். ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் கம்ப்யூட்டர் வாங்கியவர்கள் தாராளமாக விஸ்டாவிற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். மிகவும் உற்சாகமாக விஸ்டா இயக்க எண்ணினால், இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ கிடைக்கும் விஸ்டாவுடன் இணைந்து செயலாற்றும் பல சாப்ட்வேர் புரோகிராம்களைப் பெற்று இயக்கலாம்.

விண்டோஸ் விஸ்டா வாங்கிட எளிய வழி எது?

விண்டோஸ் விஸ்டா பதித்தவாறே வழங்கப்படும் புதிய கம்ப்யூட்டர் ஒன்றை வாங்குவதே சிறந்தது. உங்கள் கம்ப்யூட்டர் நிச்சயம் விஸ்டா இயங்குவதற்குத் தேவையான குறைந்த பட்ச அமைப்புகளுக்கு மேலாகவே இருக்கும்.

விஸ்டாவிற்கான குறைந்த பட்ச தேவை என்பது என்ன?

உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் குறைந்த பட்சம் 800 மெகா ஹெர்ட்ஸ் புராசசர் இருக்க வேண்டும். 800 து 600 ரெசல்யூசன் தரக்கூடிய கிராபிக் சிப், குறைந்தது 512 எம்பி சிஸ்டம் மெமரி மற்றும் ஹார்ட் டிஸ்க்கில் 15 ஜிபி காலி இடம்.

என்னுடைய கம்ப்யூட்டர் விஸ்டாவை ஏற்றுக் கொள்ளும் என்று விஸ்டா பதியாமலேயே கண்டு பிடிக்க இயலுமா?

முடியும். Windows Vista Upgrade Advisor என்று ஒரு புரோகிராமினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் இணைய தளத்தில் தந்துள்ளது. இது இலவசம் தான். இந்த புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து உங்கள் கம்ப்யூட்டர் விஸ்டாவை ஏற்றுக் கொள்ளுமா? இல்லையா? என்றும் அப்படி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் எந்த பதிப்பு சரியாக இருக்கும் என்றும் அறிவிக்கும். இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்காது. இந்த புரோகிராம் உங்களுடைய புராசசர், கிராபிக்ஸ் கார்ட், சிஸ்டம் மெமரி ஆகியவை குறித்த ரிப்போர்ட் அளிப்பதுடன் ஸ்கேனர், வெப்கேமரா, மானிட்டர் மற்றும் பிரிண்டர் ஆகிய சாதனங்கள் இயங்குமா என்பதனையும் தெரிவிக்கும். அத்துடன் சில புரோகிராம்கள் மீண்டும் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தெரிவிக்கிறது.

விஸ்டாவில் எத்தனை வகை உள்ளன?

விஸ்டா தொகுப்பு நான்கு வகையில் வந்துள்ளது. அவை Home Basic, Home Premium, Business and Ultimate editions ஆகும். ஹோம் பேசிக் வகையில் முப்பரிமாணத்தில் இயங்கும் ஏரோ டெஸ்க் டாப் (Aero desktop) கிடைக்காது. விண்டோஸ் மீடியா சென்டர் சாப்ட்வேரும் இதனுடன் இருக்காது. இது பிரிமியம் மற்றும் அல்டிமேட் பதிப்புடன் கிடைக்கிறது. அல்டிமேட் தொகுப்பில் மிகச் சிறந்த வசதி ஒன்று உள்ளது. அது Bitlocker Drive Encryption ஆகும். இது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா திருடப்படுவதனையும் காணாமல் போவதையும் தடுக்க சிறந்த வழியினைத் தருகிறது.

No comments: